நல்லடக்க அறிவிப்பு – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / நல்லடக்க அறிவிப்பு

நல்லடக்க அறிவிப்பு

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக்குழு செயலாளர் பெரம்பலூர் மாவட்டம், விஜய கோபாலபுரம் அல்ஹாஜ் முஹம்மது சிராஜுத்தீன் (வயது 43) அவர்கள் நேற்று (29/06/2016 புதன் கிழமை) குவைத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்ஷா அல்லாஹ் இன்று (30/06/2016 வியாழன்) இரவு 9:00 மணிக்கு (தராவீஹ் தொழுகைக்கு பிறகு) குவைத், சுலைபிஃகாத் மையவாடியில் ஐனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் அனைத்து நல்லறங்களையும் ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து, *ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்* என்ற உயர்ந்த சுவனத்தில் சேர்த்துடவும், அவர்களின் குடும்பத்தினர், உறவுகள் & நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா* என்ற அழகிய பொறுமையை வழங்கிடவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) துஆ செய்கின்றது.

sirajudeen
குவைத் வாழ் மக்கள் அனைவரும் அன்னாரின் நல்லடக்கத்தில் திரளாக கலந்து கொள்ளுமாறும்,
உலக மக்கள் அனைவரும்
அன்னாரின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

📱+965 66641434
📞 +965 97872482

About admin

Check Also

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்!

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்! அமைப்பு, கொள்கை, ஜமாஅத் வேறுபாடின்றி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *